வண்டு முருகனாய் மாட்டிக்கொண்ட ரா.பா!

வண்டு முருகனாய் மாட்டிக்கொண்ட ரா.பா!
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்திருப்பதாகச் சொல்கிறது போலீஸ். ஆனால், ரா.பா. ராஜபாளையம் வழியாக கேரளத்துக்குப் போயிருக்கலாம் என்கிறது விருதுநகர் அதிமுக வட்டாரம். அதேசமயத்தில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகப் போடப்பட்டுள்ள மோசடி வழக்கு குறித்து, வக்கீல் வண்டு முருகன் காமெடி கணக்காய் கதை சொல்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்துக்காரர்கள். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சொந்தத் தம்பி விஜய நல்லதம்பி (சீமானின் சின்னமாமனார்). வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த இவர், பலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் வாங்கி மோசடி செய்திருக்கிறார். 2015-ல், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் பெயரைச் சொல்லியே 10 லட்ச ரூபாய் சீட்டிங் போட்டிருக்கிறார். இது தொடர்பாக அப்போது தேனி மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கும் (வழக்கு எண்: 510/2015) பதிவானது. இன்னும் சில மோசடி வழக்குகளும் இவர் மீது உண்டு.

கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜியைப் போலவே, காவிச் சட்டை மாட்டிக்கொண்டு அவரிடம் ஒட்டிக்கொண்ட நல்லதம்பி, அரசு வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பறித்திருக்கிறார். அதில் ஒருவர் சாத்தூர் ரவீந்திரன். ராஜேந்திர பாலாஜி மூலமாக ஆவினில் உதவி மேலாளர் போஸ்டிங் வாங்கித் தருவதாக இவரிடம் 30 லட்சத்தை முழுங்கிவிட்டாராம் நல்லதம்பி.

விஜய நல்லதம்பி
விஜய நல்லதம்பி

ஆட்சி மாறியதும், இது தொடர்பாக நல்லதம்பி மீது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார் ரவீந்திரன். அந்தப் புகாரில் 2-வது குற்றவாளியாக ராஜேந்திர பாலாஜியையும் சேர்த்தது போலீஸ். இதனிடையே, தனது பெயரைச் சொல்லி நல்லதம்பி கெட்ட வேலைகள் செய்வதைக் கேள்விப்பட்ட ரா.பா., தலைமையில் சொல்லி அவரது ஒன்றியச் செயலாளர் பதவியைப் பறித்தார். இந்நிலையியில், ரவீந்திரன் கொடுத்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்தபோது, “முப்பது லட்சம் வாங்கல... மூன்றரைக் கோடி வாங்கிருக்கேன்” என்று வண்டு முருகன் கணக்காய்ச் சொன்னாராம் நல்லதம்பி. ”வாங்கிய பணம் எங்கே?” என்று கேட்டதற்கு, “அதையெல்லாம் ராஜேந்திர பாலாஜிகிட்டத்தான் குடுத்தேன்” என்று கூசாமல் சொல்லிவிட்டாராம். இந்த ஸ்டேட்மென்ட் தான் இப்போது ரா.பா-வை தலைமறைவாகி ஓடவைத்திருக்கிறது. ஆனால், “வேலையை முடித்துக் கொடுக்காமல் யாரிடமும் பணத்தை வாங்கும் வழக்கம் ரா.பாவுக்கு இல்லை” என்று அவரது அரசியல் எதிரிகளே சொல்கிறார்கள். “நல்லதம்பி ஒரு பக்கா மோசடிப் பேர்வழி. அவர் சொல்கிறார் என்பதற்காக ரா.பா. மீது உள்நோக்கத்துடன் வழக்குப் போட்டிருக்கும் போலீஸ், இந்த விஷயத்திலும் கோர்ட்டில் வாங்குப்படப் போகிறது” என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.