இலாகா மாற்றம்: இடிந்துபோன அதிமுக!

இலாகா மாற்றம்: இடிந்துபோன அதிமுக!
கருணாநிதியுடன் ராஜ கண்ணப்பன்...

அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றல் விவகாரத்தில் திமுகவினரைவிட சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் ரொம்பவே அதிர்ந்து கிடக்கிறார்கள். இருவருமே யாதவ சமூகம் தான் என்றாலும் ராஜ கண்ணப்பனுக்கும், அமைச்சர் பெரியகருப்பனுக்கும் ஏழாம் பொருத்தம். ராமநாதபுரம் மாவட்ட கோட்டாவில் அமைச்சராக இருந்தாலும் சொந்த மாவட்டமான சிவகங்கை மீது ராஜ கண்ணப்பனுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. சிவகங்கையில் பெரியகருப்பன் மீது அதிருப்தியில் இருக்கும் திமுகவினரை தனது சிவகங்கை வீட்டுக்கு வரவைத்து ராஜ கண்ணப்பன் ராஜாங்க ஆலோசனை நடத்துவதுண்டு. அதேசமயம், போக்குவரத்துத் துறையில் பணி மாறுதல்கள் உள்ளிட்ட பஞ்சாயத்துக்களுக்காக ராஜ கண்ணப்பனின் பழைய அதிமுக விசுவாசிகளும் பழைய உரிமையுடன் அவரைச் சந்தித்து காரியம் சாதித்து வந்தார்கள். அதிலும் குறிப்பாக, தாங்கள் சார்ந்த யாதவ சமூகத்தினர் என்றால் தாமதிக்காமல் கடிதம் கொடுத்து அனுப்பினாராம் ராஜ கண்ணப்பனின் உடன்பிறப்பு. அமைச்சரின் சிபாரிசுக் கடிதத்துடன் அதிமுககாரர்கள் வரிசைகட்டி வருவதைப் பார்த்து அதிகாரிகளே மிரண்டு போனதும் உண்டு. இதைவைத்து, போக்குவரத்துத் துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஒன்றரை லட்சம் வரைக்கும் ‘கட்டிங்’ பேசியும் சிலர் காரியம் சாதித்துக் கொடுத்தார்களாம். இனி, அந்த வழிகள் எல்லாம் அடைபட்டுவிடும் என்பதால் ராஜ கண்ணப்பனின் அதிமுக விசுவாசிகள் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள்.

Related Stories

No stories found.