புலம்பும் ராஜ கண்ணப்பன்!

புலம்பும் ராஜ கண்ணப்பன்!
ராஜ கண்ணப்பன்

இலாகா மாற்றம் குறித்து தன்னிடம் எந்தக் கருத்தும் கேட்காமலேயே முடிவெடுத்துவிட்டார் ஸ்டாலின் என்று ஏக வருத்தத்தில் இருக்கிறாராம் அமைச்சர் ராஜ கண்ணப்பன். இலாகா மாற்றப்பட்டதும், எஸ்.எஸ்.சிவசங்கர் முதல்வரைச் சந்தித்து ஆசிபெற்றார். ஆனால், ராஜ கண்ணப்பனோ முதல்வரிடம் பேசக்கூட இல்லையாம். “திமுகவில் இருக்கும் சிலரும், அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் சிலரும் நமக்கு எதிராக குறிவைத்துவிட்டார்கள். அவர்களின் பேச்சைக் கேட்டு ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவிட்டார். இதிலும் எத்தனை நாளைக்கு வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் ராஜ கண்ணப்பன். திமுகவின் கூட்டணி தோழர்கள் சிலரோ, “ராஜ கண்ணப்பன் மாதிரியே தடாலடி அமைச்சர்கள் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். ராஜ கண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்தே நீக்கி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மற்றவர்கள் தானாகவே அடங்கியிருப்பார்கள்” என்று பொதுவெளியிலேயே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.