சர்வமத யாத்திரையாக மாற்றிய கேரள காங்கிரஸ்!

சர்வமத யாத்திரையாக மாற்றிய கேரள காங்கிரஸ்!

தமிழகத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை, “ராகுலின் கிறிஸ்தவ யாத்திரை” என தமிழக பாஜகவினர் கிண்டலடித்தார்கள். சர்ச்சையில் சிக்கிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் சந்திப்பு, முட்டடிச்சான் பாறை தேவாலயத்தில் பாதிரியார்களுடன் கலந்துரையாடல் என ராகுல் கிறிஸ்தவ சாமியார்களை மட்டும் சந்தித்ததே இதற்குக் காரணம். ”இங்கெல்லாம் போன ராகுல், ஏன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யவில்லை? சுசீந்திரத்தில் பயணத்தை முடித்தவர், அங்கிருந்த தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு ஏன் செல்லவில்லை?” என கொக்கிபோட்டது குமரி பாஜக. இதற்கு தமிழக கதர்பார்ட்டிகளால் பதில்சொல்ல முடியவில்லை. காரணம், இந்தப் பயணத்தை எல்லாம் திட்டமிட்டவர்கள் டெல்லிக்காரர்கள்.

அதேசமயம், தமிழகத்தில் இத்தகைய விமர்சனங்கள் கிளம்பியதுமே கேரள காங்கிரஸார் உஷாராகிவிட்டார்கள். அதனால் அவர்கள், ராகுல் காந்தியை சர்வமத ஆசிரமங்களுக்கும் அழைத்துச் செல்லும் விதமாக பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துவிட்டார்கள். அங்கே இந்து மதம் சார்ந்த இடங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் ராகுல் பயணித்து வருகிறார். கேரளத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. ஆனாலும் சங் பரிவார் அமைப்புகள் ஆழமாக வேர்விட்டிருக்கும் மாநிலம் கேரளம். இதை உணர்ந்திருப் பதாலேயே ராகுலும் அய்யன்காளி, நாராயண குரு என எந்த நினைவிடத்தைப் பார்த்தாலும் தயங்காமல் உள்ளே சென்றுவிடுகிறாராம். இதனால் இங்கே என்ன சொல்லி அவரது நடைபயணத்தை விமர்சனம் செய்வது எனத் தெரியாமல் பாஜக சேட்டன்கள் சற்றே குழம்பித்தான் கிடக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in