ரகம் மாறிய ரகுபதி!

ரகம் மாறிய ரகுபதி!

‘நீதிமன்ற சிபாரிசுகளுக்காக யாரும் என் வீட்டுக்கு வரவேண்டாம்’ என்று வீட்டில் போர்டு வைக்கும் அளவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆபீசராக இருந்தார் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி. ஆனால், சமீபகாலமாக அவரது பேச்சிலும், செயலிலும் சேஞ்ச் தெரிகிறதாம். “ஒரு அமைச்சராக மக்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு நன்மை செய்கிறேன். ஆனால், கட்சிக்காரர்களுக்குத்தான் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது கட்சித்தலைமை கொஞ்சம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இனி கட்சிக்காரர்களுக்கு வேண்டியதைச் செய்ய முயற்சிப்பேன்” என்று உருகுகிறாராம் ரகுபதி. “உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீத வெற்றியைப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். கட்சிக்காரர்கள் தயவில்லாமல் அதை சாத்தியமாக்க முடியாதே. அதனால்தான் அண்ணன் ரகுபதி இப்படி உருக ஆரம்பித்திருக்கிறார்” என்கிறார்கள் வெவரமான உடன்பிறப்புகள்.

Related Stories

No stories found.