ராகுலுக்காக வந்திருக்கும் 2 ஆயிரம் பேர்!

பயணத்தின் போது...
பயணத்தின் போது...

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை பல்வேறு மாநிலங்களிலும் திட்டமிட்டு கொண்டு செலுத்த டெல்லி பக்கமிருந்து சுமார் 2 ஆயிரம் பேர் கொண்ட படையே வந்திருக்கிறதாம். இவர்களுக்கான செலவுகளை கவனிப்பதற்கே மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களுக்கு முழி பிதுங்குகிறதாம். ராகுலுக்கான மேடை அமைப்பு தொடங்கி மேடையில் அவர் பேச வேண்டிய உரை தயாரிப்பு வரை உள்ளூர் கோஷ்டிகளுக்கு இடம் கொடுக்காமல் டெல்லி பார்ட்டிகளே கவனிக்கிறார்களாம். பண்ணையார் அரசியல் நடத்தியே பழகிப்போன பழைய காங்கிரஸ்கார்களுக்கு ஒருவிதத்தில் இதெல்லாம் வசதியாக இருந்தாலும், கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என கரிசனப்படுவர்கள், “இத்தனை பேரை எங்கிருந்தோ கொண்டுவந்துதான் இந்த நடைபயணத்தை நடத்த வேண்டுமா... இங்கிருப்பவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தால் கட்சி வளராதா?” என பொதுவெளியில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in