ஓவர்டேக் உதயகுமார்!

ஓவர்டேக் உதயகுமார்!


ஓபிஎஸ்சை ஓரங்கட்டியதால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் தனக்கான செல்வாக்கு சரிந்திருப்பதாக நினைக்கிறாராம் ஈபிஎஸ். இதை ஈடுகட்டும் விதமாக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாராம் ஈபிஎஸ். இவர்களில் உதயகுமார், ஈபிஎஸ்சை ஆதரிப்பதில் மற்றவர்களைவிட பத்தடி முன்னே பாய்கிறாராம். அதை மனதில் வைத்தே அவரை ஓபிஎஸ் வகித்துவந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் அமர்த்தினாராம் ஈபிஎஸ். இதற்கு நன்றி பாராட்டும் விதமாக, அண்மையில் திண்டுக்கல் வந்த ஈபிஎஸ்சுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினாராம் உதயகுமார். ஏற்கெனவே அந்த மாவட்டத்தில் சீனியர்களான நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இருந்தும் அவர்களை ஓவர் டேக் செய்யும் விதமாக இப்படி பிரம்மாண்டம் காட்டினாராம் உதயகுமார். தனக்கு அளிக்கப்பட்ட தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளால் உச்சி குளிர்ந்துபோன ஈபிஎஸ், உதயகுமாரை தனக்கான தென் மண்டல தளபதியாக களமிறக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in