
‘நகராட்சி தேர்தலில் திமுக தோற்றால் நான் பொறுப்பில்லை’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில், தைரியமாக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராம் புதுக்கோட்டை நகர திமுக செயலாளர் நைனாமுகமது. மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் எம்எல்ஏ முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுக்காக கவுன்சிலர் சீட்களை பங்குவைத்துப் பிரித்துக் கொண்டதே இதற்குக் காரணமாம். அல்லுச் சில்லு ஆட்களுக்கெல்லாம் இவர்கள் கவுன்சிலர் சீட் கொடுத்துவிட்டதால், அந்த வார்டுகளில் செல்வாக்கான நபர்களுக்கு சீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதாம். இதனால், 12 வார்டுகளில் திமுகவினரே சுயேச்சையாக போட்டியிடுகிறார்கள். இதனால் பல இடங்களில் உதயசூரியன் தோற்கக்கூடும் என்று அஞ்சியே, முன்கூட்டியே பொறுப்புத் துறப்பு கடிதத்தை தலைமைக்கு அனுப்பி இருக்கிறாராம் நைனாமுகமது.