உப்புப்போட்டு சோறு திங்கிறவங்க மட்டும் என் வீட்டுக்குள்ள வாங்க!

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்கிறதாம் பாஜக வட்டாரம். எதிலாவது எசகு பிசகாகச் சிக்கினால் அதைவைத்தே அவர் மீது வழக்குகளைப் பாய்ச்சுவது அல்லது பொதுவெளியில் விமர்சனத்தைக் கிளப்பி அவரது மதிப்பைக் குலைப்பது - இது தான் பாஜகவின் முக்கிய அஜென்டா என்கிறார்கள். இதை உள்வாங்கி இருக்கும் தியாகராஜனும் ரொம்பவே உஷாராக இருக்கிறாராம். அண்மையில், மதுரையில் உள்ள தனது ஆதரவாளர்கள் சிலரை அழைத்துப் பேசிய தியாகராஜன், “எனக்கு எதிரா எதுடா சிக்கும்னு பாஜககாரங்க காத்துட்டு இருக்காங்க. அதனால இப்பெல்லாம் நான் யாருக்கிட்டயும் எந்த சிபாரிசும் பண்றதில்ல. போன்லகூட அவ்வளவா பேசுறதில்ல. நீங்க யாராச்சும் ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டு வந்தாலும் அதைவெச்சு என்னோட தலைய உருட்டப் பார்ப்பாங்க. அதனால எல்லாருமே ஜாக்கிரதையா இருங்க” என்று சொன்னாராம். கூடவே, மதுரைக்குள் தனது பெயரைச் சொல்லி டாம்பீகம் பண்ணிக்கொண்டிருக்கும் மாசிவீதி பார்ட்டி ஒருவரை தனது வீட்டுக்குள் வரக்கூடாது என தடைபோட்டிருக்கும் தியாகராஜன், “உப்புப் போட்டுச் சோறு திங்கிறவங்க மட்டும் என் வீட்டுக்குள்ள வாங்க. மத்தவங்க தயவுசெஞ்சு வராதீங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in