பி.டி.ஆர். பிள்ளையின் பெருமைமிகு மாற்றம்!

பி.டி.ஆர். பிள்ளையின் பெருமைமிகு மாற்றம்!
ஐ.டி விங் கவுன்சிலருடன்...

சட்டை கசங்காமல், வீதியில் இறங்காமல் பண்ணையார் அரசியல் செய்கிறார் என்று புகார் சொன்னவர்களே வியக்குமளவுக்கு, அடியோடு மாறிவிட்டார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். முன்பெல்லாம் குடும்பப் பெருமை பேசியே மற்றவர்களை எரிச்சல்பட வைத்த அவர், இப்போது மற்றவர்களின் அருமை பெருமைகளையும் பேச ஆரம்பித்திருக்கிறார். மதுரை மாநகராட்சித் தேர்தலில் தனது மதுரை மத்திய தொகுதிக்குள் வரும் 16 வார்டுகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஜெயிக்க வைத்திருக்கும் தியாகராஜன், 2017-ல் திமுக ஐடி விங்குக்காக தான் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்த இளைஞர் ஒருவர், தற்போது கவுன்சிலராகியிருக்கும் மகிழ்வான செய்தியை பெருமைபொங்கப் பதிவிட்டு, ‘திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுப்பது அரசியலுக்கும் நிறுவன பலத்துக்கும் முக்கியம்’ என்று ட்விட் செய்திருக்கிறார்.

Related Stories

No stories found.