அடிச்சுக் கேட்டாலும் அமைதியா இரு!

அடிச்சுக் கேட்டாலும் அமைதியா இரு!
பழனிவேல் தியாகராஜன்

ஒரு காலத்தில் அதிரடிப் பேச்சுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். அதனால் திமுகவும் சில பல தர்மசங்கடங்களை எதிர்கொண்டது. அப்படிப்பட்டவர் தற்போது, உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு போகும் என்ற ஆக்டர் விஜயின் தத்துவத்தை அப்படியே பின்பற்ற ஆரம்பித்துவிட்டார். இவரைக் குறிவைத்து பாஜகவின் எச்.ராஜா, அண்ணாமலை போன்றவர்கள் தினம் தினம் ஏதாவது அம்புகளை எடுத்து வீசுகிறார்கள். அனைத்தையும் நெஞ்சில் ஏந்திக்கொண்டு அடக்கிவாசிக்கிறார். அரசு நிகழ்ச்சிகளுக்கு வரும்போது செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டால், “நிகழ்ச்சி முடியட்டுமே பேசுவோம்” என்று சொல்பவர், நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்கள் ஓடினால், “அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமாச்சே” என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு முன்னால் ஓடிவிடுகிறார். பண்பாளரின் புதல்வருக்கு இப்போதுதான் பாலிடிக்ஸ் புரிய ஆரம்பித்திருக்கிறது போலிருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in