ப்ரீபிளான் பினராயி!

ப்ரீபிளான் பினராயி!
முகமது ரியாஸ்

மூன்றாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக கொடியேறி பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தமுறை, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகனும், அமைச்சருமான முகமது ரியாஸுக்கும் கட்சியில் மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் கேரளத்தில் காலியாகும் ராஜ்யசபா சீட்டை பிடிக்க சீனியர் சிட்டிசன்கள் எல்லாம் முட்டி மோதிக் கொண்டிருக்க, மார்க்சிஸ்ட் கட்சி 75 வயதைக் கடந்த சீனியர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாது என அறிவித்து கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், தனக்கு ஓய்வளிக்கப்படும் நேரம் வரும்போது கட்சிக்குள் தனக்கான பிடிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே மருமகன் ரியாஸை மெல்ல மெல்ல கட்சிக்குள்ளும் முக்கிய பொறுப்புக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறாராம் பினராயி.

Related Stories

No stories found.