
ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில், ஓபிஎஸ்சின் தேனி மாவட்டத்தில், ‘விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவி ஏற்கவிருக்கும் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்’ என போஸ்டர் ஒட்டி மீண்டும் பிரயளத்தைக் கிளப்பி இருக்கிறார்கள். அதுவும் பெரியகுளத்தில் ஓபிஎஸ்சின் வீட்டைச் சுற்றிச் சுற்றி இந்தப் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய இந்த போஸ்டரை ஒட்டிய சுரேஷ் என்பவர் மீது தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் போலீசில் புகார் கொடுத்தார்.
சுரேஷை விசாரித்த போலீஸ், ‘இனிமேல் இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்ட மாட்டேன்' என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டதாம். சையது கானைக் கேட்டால், “சுரேஷ் அதிமுககாரரே இல்லை. அவர் அமமுகவில் இருக்கிறார். தினகரன் படத்தைத்தான் பாக்கெட்ல வெச்சிருந்தாரு. பார்ட்டிக்குள்ள குழப்பம் உண்டாக்கணும்னே இப்படியெல்லாம் பண்றாங்க” என்கிறார். இதே கான் தான் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும் என தீர்மானம் போட்டு சர்ச்சையைக் கிளப்பியவர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.