ஹாட் லீக்ஸ் - பூச்சி முருகனிடம் வெடித்த பூசல்!

ஹாட் லீக்ஸ்  -  

பூச்சி முருகனிடம் வெடித்த பூசல்!
நெல்லையில் பூச்சி முருகனுக்கு வரவேற்பு...

தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காக குமரி மாவட்டத்துக்கு வந்திருந்த திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனிடம், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் புலம்பித்தள்ளிவிட்டாராம். அமைச்சர் மனோதங்கராஜும், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் மகேஷும் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களைக்கூட அவர்களேதான் தேர்ந்தெடுத்தார்கள் எனவும் சுரேஷ்ராஜன் ஆதங்கப்பட்டாராம். பதிலுக்கு, மனோதங்கராஜ், மகேஷ் தரப்பினரும் சுரேஷ்ராஜனுக்கு எதிராகப் புகார்களை அடுக்கினார்களாம். நொந்துபோன பூச்சி, “உங்க பிரச்சினைகளை எல்லாம் தேர்தல் முடிஞ்சு வெச்சுக்கலாம். முதல்ல நாகர்கோவிலின் முதல் மேயரை திமுக வசமாக்கப் பாருங்கள்” என சற்று கண்டிப்புடனே சொல்லிச் சென்றாராம். நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வராது போனால், மாவட்ட கழகத்தில் அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.