முதல்வருக்கு விழா எடுக்க முனைப்புக்காட்டும் முருகன்!

பூச்சி எஸ்.முருகன்
பூச்சி எஸ்.முருகன்

திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினரும் திமுகவின் தலைமை நிலையச் செயலாளருமான பூச்சி எஸ்.முருகன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திரைத் துறையினரின் சார்பில் பாராட்டு விழா நடத்தும் முயற்சியில் இருக்கிறாராம். அவர் தனது விருப்பத்தைச் ஸ்டாலினிடம் சொன்னபோது, “என்ன சாதிச்சிட்டேன்னு விழா எடுக்க நினைக்கிறீங்க. இன்னும் நிறையச் செய்யவேண்டியது இருக்கு. அதையும் செஞ்சுமுடிச்சுட்டு அப்புறமா இந்த பாராட்டு விழாவை எல்லாம் வெச்சுக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டாராம் ஸ்டாலின்.

ஆனாலும் முதல்வருக்கு விழா எடுக்கும் முயற்சியில் முனைப்புடன் இருக்கிறாராம் பூச்சி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in