நிதிஷ்குமார் வழியில் ரங்கசாமி?

ரங்கசாமி
ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போதே பலரும் பதறினார்கள். இருந்தாலும் ரங்கசாமி பாஜகவை பெரிதும் நம்பினார். ஆனால், அவரின் அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கிவிட்டது பாஜக. அங்கு நடக்கும் அனைத்துமே ரங்கசாமியின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நடக்கிறது. அதற்குக் காரணம், ஆட்சியைப் பங்குபோட்டிருக்கும் பாஜக. கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ததால் அரசின் செலவினங்களுக்கு போதிய நிதி கிடைக்காமல் அல்லாடிய ரங்கசாமி, இந்த ஆண்டாவது முழுமையான பட்ஜெட்டை வாசித்துவிடவேண்டும் என பிரயாசைப்பட்டார். இதற்காக டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். ஆனாலும் அவர் நினைத்தது நடக்கவில்லை. முழுமையான பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு இசைவளிக்காததால் பட்ஜெட் தாக்கல் தினத்தில் ஆளுநர் உரை வாசிப்பு மட்டுமே சம்பிரதாயமாக நடைபெற்று முடிந்தது. இதனால் ஏக வருத்தத்தில் இருக்கும் ரங்கசாமி, “இதற்கு மேல் இவர்களிடம் எப்படி இணக்கமாகப் போவது? பேசாமல் நாமும் நிதிஷ்குமார் வழியில் போயிட வேண்டியது தான்” என்று தனது ஆதரவாளர்கள் வட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in