கல்வெட்டை உடைத்தது கே.எஸ்.அழகிரி; படைதிரட்டும் பொன்னார்!

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

ராகுலின் நடைபயணத்துக்காக ஒருவாரம் முன்னதாகவே குமரியில் முகாமிட்டு பணிகளை திட்டமிட்டவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. அதற்கு பரிசளிக்கும் விதமாக அவருக்கு எதிராக அஸ்திரம் எடுத்திருக்கிறது குமரி பாஜக. கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் கட்டப்பட்ட பாலத்தை 2019-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராகுல் நடைபயணம் தொடங்கவிருந்த சமயத்தில், இந்த பாலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை யாரோ சேதப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், கே.எஸ்.அழகிரியின் தூண்டுதலில் அவரது முன்னிலையிலேயே கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதாக பாஜக தரப்பில் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாகவே வழக்குப்பதிவு செய்திருக்கிறது போலீஸ்.

இந்த விவகாரத்தை இப்போது கையிலெடுத்திருக்கும் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தேச ஒற்றுமைப் பயணம் எனச்சொல்லிவிட்டு கே.எஸ்.அழகிரி குமரி மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்”என்று பொங்குகிறார். இந்த விவகாரத்தில் அழகிரி மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் பாஜக தரப்பில் படைதிரட்டுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in