பத்தாவது முறையும் பொன்னார் தானா?

பத்தாவது முறையும் பொன்னார் தானா?

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 9 முறை போட்டியிட்டு, இருமுறை வென்று, ஒரு முறை மத்திய அமைச்சராகவும் இருந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். சாதாரணமாக, கட்சி நிர்வாகிகள் போன்போட்டால் கூட அத்தனை சீக்கிரம் எடுக்க மாட்டார் என்ற விமர்சனம் பொன்னார் மீது உண்டு. ஆனால், அண்மைக்காலமாக அந்த அனுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. இப்போதெல்லாம் அவரே கட்சி நிர்வாகிகளுக்கு வாண்டடாக போன்போட்டுப் பேசுகிறாராம். தினம் ஒரு கிராமக் கோயிலுக்குச் சென்று மக்கள் சந்திப்பையும் நடத்துகிறார். அண்ணாச்சியிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் என்று கேட்டால், “2024 மக்களவைத் தேர்தலில் அவருக்குத்தான் மறுபடியும் சீட் என தலைமை யிலிருந்து சொல்லிவிட்டார்கள். அதனால் தான் இந்த திடீர் மாற்றம்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். “ஒன்பது முறை போட்டியிட்டது போதாதா... இந்த முறையாவது இன்னொரு வருக்கு விட்டுக்கொடுக்கக்கூடாதா?” என்று குமரி பாஜகவில் ஒரு சாரர் மத்தியில் குமைச்சல் இருந்தாலும் பொன்னார் ஆதரவாளர் கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அண்ணாச்சிக்காக களப்பணி செய்ய களத்துக்கு வந்தேவிட்டார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in