தமிழரசுக்கு தங்கையின் சிபாரிசு!தமிழரசுக்கு தங்கையின் சிபாரிசு!
செல்வியுடன் தமிழரசு

சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி கம்பெனியில், மாதம்தோறும் 12 ஆயிரம் டன் அளவுக்கு இரும்புக் கழிவுகள் தேங்குமாம். பொதுவாக, ஆளும்கட்சி ஆதரவில் இருப்பவர்கள் தான் இந்தக் கழிவுகளை மொத்தக் குத்தகைக்கு எடுத்து காசாக்குவார்கள். இதில் மாதம்தோறும் கோடிகளில் வருமானம் கொட்டும். முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஸ்டீல் கம்பெனி இருப்பதால், இந்தக் குத்தகையை தனது கம்பெனிக்காக எடுத்துக்கொள்ள பிரியப்பட்டாராம் உதயா. இன்னொரு பக்கம் இதேபோல் மு.க.தமிழரசுவும் களத்துக்கு வந்தாராம். யாரிடம் இதைத் தருவது என குழப்பம் நீடித்த நிலையில், கருணாநிதியின் மகள் செல்வி தலையிட்டு இந்தக் குத்தகையை அண்ணன் தமிழரசுவுக்கு தரவைத்தாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in