சும்மா இருங்கோ மாப்ள...

சும்மா இருங்கோ மாப்ள...

கேரள பொதுப்பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரும், முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மருமகனுமான முகமது ரியாஸின், தன்போக்கிலான பேச்சுக்கள் பினராயிக்கு பெருத்த தலைவலியாக இருக்கிறதாம். “எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களை சந்திக்க வரும்போது கூடவே ஒப்பந்ததாரர்களை அழைத்து வருவது நல்லதல்ல” என சட்டப்பேரவையிலேயே பேசினார் ரியாஸ். இதற்காக சக காம்ரேடுகள் அவர் மீது செம கடுப்பில் இருந்தார்கள். நிலைமையைப் புரிந்துகொண்டு, அண்மையில் நடந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார் ரியாஸ். பிரச்சினை இத்தோடு முடிந்தது என பினராயி நினைத்துக் கொண்டிருக்கையில், “நான் ஒன்றும் மன்னிப்புக் கேட்கவில்லை... இடது ஜனநாயக முன்னணி அரசின் குரலைத்தான் பேசினேன்” என்று மீடியாக்களுக்கு தீனிபோட்டு புதுப் பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார் அன்பு மருமகன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in