ஆரம்பிச்சுட்டாருப்பா அறிவுடைநம்பி!

ஆரம்பிச்சுட்டாருப்பா அறிவுடைநம்பி!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றவர் அறிவுடைநம்பி. ரியல் எஸ்டேட் பார்ட்டியான இவர், மாதக்குலுக்கலில் வீட்டுமனைகள் விற்பனை செய்த விவகாரத்தில் ஏற்கெனவே வில்லங்கத்தில் சிக்கிக் கொண்டார். அப்போது, ஆளும்கட்சியாக இருந்ததால் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மூலமாக பிரச்சினை தீர்க்கப்பட்டது. தற்போது திரும்பவும் செங்கிப்பட்டி அருகே பிளாட் போட்டு விற்பனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் நம்பி. “என்னாங்க... இந்த மனுஷன் மறுபடி கெளம்பீட்டாரு..?” என்று நம்பி ஆதரவாளர்களிடம் கேட்டால், “அட கம்முன்னு இருங்க... எல்லாம் வைத்தி அண்ணனோட தயவுலதான் நடக்குது. அவரோட சப்போர்ட் இல்லாட்டா இந்தத் தொழில்ல நிக்க முடியுமா?” என்று புதுக்கதை கட்டுகிறார்கள் நம்பியின் ஆட்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in