ஸ்கெட்ச் போட்டு தூக்குறாங்கப்பா!

ஸ்கெட்ச் போட்டு தூக்குறாங்கப்பா!
அம்மு ஆன்றோ

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன், குமரியில் எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்வதில் அதிதீவிரம் காட்டி வருகிறார். தனது பிர்காவுக்குள் இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இருவரை ஏற்கெனவே திமுகவுக்கு இழுத்துவிட்டார். இதனால் ஒரு ஒன்றியத் தலைவர் பதவியை பறிகொடுத்தது அதிமுக. இதையடுத்து இன்னும் சிலருக்கும் அணி மாறும் சபலம் வந்துவிட்டது. அமமுக பக்கமும் தனது திருப்பார்வையை திருப்பியுள்ள சுரேஷ்ராஜன், நாகர்கோவில் தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிட்ட அம்மு ஆன்றோ, கன்னியாகுமரியில் களம்கண்ட செந்தில்முருகன் ஆகியோரை திமுகவில் இணைத்துவிட்டார். அடுத்ததாக, தேர்தலில் தனது தோல்விக்குக் காரணமான பாஜகவையும் குறிவைக்கிறாராம். உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து தாமரைக் கட்சியில் இருந்தும் சிலர் தடம் மாறலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.