பாதாளச் சாக்கடை பாலிடிக்ஸ்!

பாதாளச் சாக்கடை பாலிடிக்ஸ்!
கார்த்தி சிதம்பரம்

காரைக்குடியில் கடந்த அதிமுக ஆட்சியில் 112 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைத் தொடங்கினார்கள். வருடம் மூன்றுக்கு மேல் ஆகியும் இன்னும் திட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தத் திட்டத்துக்கான டெண்டரை சென்னையிலேயே ‘பேசிமுடித்து’ எடுத்தது முன்னாள் அதிமுக அமைச்சர் இசக்கி சுப்பையாவின் நிறுவனம். இந்த நிலையில், திட்டத்தை முடிக்க கூடுதல் நிதி வேண்டும் என்கிறார்களாம். இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இப்போது அதிகாரக் கூட்டணியில் இருப்பவர்களும் ‘இசக்கி அண்ட் கோவி’டம் ‘பேசி’ப் பார்த்தார்களாம். பேரம் படியவில்லையாம். இதனிடையே, காரைக்குடி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தொடர்பான தரவுகளை தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டுப் பெற்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி, “பணிகள் தரமாக நடக்கவில்லை. கூடுதல் நிதியை வேறு ஒப்பந்ததாரருக்கு ஒதுக்கிக் கொடுத்து எஞ்சிய பணிகளை முடிக்க வேண்டும்” என்று கொடி உயர்த்தி இருக்கிறார்.

இது தொடர்பாக விரைவில் முதல்வரைச் சந்திக்கவிருக்கும் கார்த்தி, பொதுக் கணக்குக் குழுவுக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று, வல்லுநர் குழுவைக் கொண்டு காரைக்குடி பாதாளச் சாக்கடைத் திட்ட பணிகளை ஆய்வு செய்யவும் கோரிக்கை வைக்கப் போகிறாராம்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

இதில் விநோதம் என்னவென்றால், தற்போது அதிமுக எம் எல்ஏ-வாக இருக்கும் இசக்கி சுப்பையாவும் பொதுக் கணக்குக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.

Related Stories

No stories found.