ஆட்டம்காட்டும் அதிரடிச் செல்லம்!

ஆட்டம்காட்டும் அதிரடிச் செல்லம்!
செல்லப்பாண்டியன்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே செல்லப்பாண்டியன் கிட்டத்தட்ட அமைச்சர் கணக்காய் அதகளம் செய்கிறாராம். தனது எல்லைக்குள் எந்த விழா நடத்தினாலும் மாவட்ட அமைச்சர்களான ரகுபதி, மெய்யநாதன் பெயர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லையாம். அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு விழாக்களிலும் ஆஜராகி, தாம் தூம் என குதிக்கிறாராம் இந்த அதிரடிச் செல்லம். அண்மையில் கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற சுகாதார மையம் திறப்பு விழாவில் அமைச்சர்களை மேடையில் வைத்துக்கொண்டே, “நாடே மழை வெள்ளத்துல மிதக்குது. முதல்வரே சாலையில் இறங்கி நின்னு மக்கள் பணி செய்யுறப்போ, நமக்கு இந்த அரசு விழா தேவையா?” என்று கட்சிக்காரர்களை கடுகடுத்தாராம். இதைக் கேட்டதும், “அண்ணனுக்கு கடுப்பு அமைச்சர்கள் மேலயா... இல்ல கட்சிக்காரன் மேலயா?” என்றபடி, திசைக்கொருவராய் தெறித்து ஓடிவிட்டார்களாம் உடன்பிறப்புகள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in