ப.சிதம்பரம் பதுங்கிய ரகசியம்!

ப.சிதம்பரம் பதுங்கிய ரகசியம்!

ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு காங்கிரஸில் பல பேர் முட்டி மோதிக் கொண்டிருந்த நிலையில், அதை தன்னகப்படுத்திவிட்டார் ப.சிதம்பரம். தனக்குத்தான் சீட் என்பதை சிதம்பரம் முன்கூட்டியே உறுதிப்படுத்திவிட்டாராம். அதனால் தான் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எதிர்கருத்து ஏதும் சொல்லி திமுகவைச் சங்கடப்படுத்த விரும்பவில்லையாம். பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் வாயில் வெள்ளைத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதிலும் சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும் தலைக்காட்டாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த நிலையில், திமுகவின் தயவில் சிதம்பரம் ராஜ்ய சபாவுக்குப் போவதை காங்கிரஸில் சிலர் வெளிப்படையாகவே விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ராஜீவ் காந்தி எனது நண்பர் எனச் சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு, ராஜ்ய சபா சீட் தான் முக்கியம் என்றால், வேறு மாநிலத்திலிருந்து தேர்வாகி இருக்கலாமே... இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து தேர்வாகி உங்களின் உயரத்தை நீங்களே குறைத்துக் கொண்டுவிட்டீர்களே தலைவர்’ என்று சிதம்பர விசுவாசிகளே சமூகவலை தளங்களில் சங்கடப் பதிவுகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in