பக்குவமாய் பேசுங்கள்... பரசு வந்துவிடுவார்!

பக்குவமாய் பேசுங்கள்... பரசு வந்துவிடுவார்!

ஒரு காலத்தில் டெல்டா அதிமுகவில் ஓஹோவென இருந்தவர் வைத்திலிங்கம். அந்த சமயத்தில் டெல்டா அதிமுகவில் இவரால் ஓரங்கட்டப்பட்டவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களை எல்லாம் இப்போது ஆள்வைத்துத் தேடிக் கொண்டிருக்கிறது ஈபிஎஸ் டீம். 2014 மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வீழ்த்தி வென்றவர் கு.பரசுராமன். ஆனால், அடுத்த தேர்தலில் இவருக்கு சீட் மறுக்கப்பட்டது. காரணம், வைத்திலிங்கம். 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலாவது வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தார் பரசு. அதையும் பதமாய் தட்டிவிட்டார் வைத்தி. இதனால் வைத்திலிங்கம் இருக்கும் வரை இங்கே இனி குப்பைக்கொட்ட முடியாது என முடிவுக்கு வந்த பரசுராமன், பாந்தமாக திமுகவில் சேர்ந்துவிட்டார். ஆனால், போன இடத்திலும் அவருக்குப் பொலிவில்லை. இருந்தாலும் சங்கடங்களைச் சகித்துக் கொண்டு அங்கே காலம் தள்ளுகிறார். இதை ஸ்மெல்பண்ணிவிட்ட ஈபிஎஸ் டீம், பரசுராமனுக்கு தூது அனுப்பி இருக்கிறதாம். “கட்சியில் முக்கிய பதவி தருவதாகச் சொல்லிப்பாருங்கள். தட்டாமல் அண்ணன் தாய்க்கழகத்துக்கு வந்துவிடுவார்” என்று பரசுராமனின் அரசியல் பங்காளிகளே சொல்லிவிட்டதால் நம்பிக்கையோடு நகர்கிறதாம் ஈபிஎஸ் டீம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in