மீண்டும் டெல்லிக்குப் புறப்படும் விவசாயிகள்?

மீண்டும் டெல்லிக்குப் புறப்படும் விவசாயிகள்?

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் வெடித்த விவசாயிகள் போராட்டம் டெல்லி வரைக்கும் பரவியது. போராட்டத்தை சமாளிக்க முடியாமல் சட்டங்களை வாபஸ் பெற்றது மத்திய அரசு. அந்த சமயத்தில், மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் தவிர இன்னும் சில கோரிக்கைகளுக்கும் ஓகே சொல்லி இருந்ததாம் மத்திய அரசு. ஆனால், அவை எதுவும் இதுவரை கவனிக்கப்படாததால் மீண்டும் போராட்டத்தைத் தொடர பஞ்சாப் விவசாயிகள் தரப்பில் ரகசிய பேச்சுவார்த்தை களைத் தொடங்கி இருக்கிறார்களாம். இம்முறை அக்னிபத் திட்டத்துக்கு எதிராக திரண்டு நிற்கும் இளைஞர்களையும் கூட்டணி சேர்த்துக் கொண்டு டெல்லியை முற்றுகையிடும் திட்டத்தில் இருக்கும் பஞ்சாப் விவசாயிகள், ஜூலை 31-ல் போராட்டத்தை தொடங்குவதாக இருக்கிறார்களாம். இதை முன்கூட்டியே அறிவித்தால் முடக்கிவிடுவார்கள் என்பதால் போராட்ட திட்டத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in