அசோகனும்... அந்த 43 சொத்துகளும்!

அசோகன்
அசோகன்

மதுரைவாசிகளே ஐயா ஓபிஎஸ்சைக் கைவிட்டுவிட்ட நிலையில், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரான எஸ்.ஏ.அசோகன் இன்னமும் ஓபிஎஸ் பக்கமே நிற்கிறார். அசோகனை இந்தப் பதவியில் அமரவைத்தது ஓபிஎஸ்தானாம். அந்த விசுவாசத்தில் அவர் பக்கம் நிற்கிறார் அசோகன். ஆனால், எடப்பாடி தரப்பினர் இதற்கு வேறொரு கதை சொல்கிறார்கள். “அதிமுக ஆட்சியில் புதிதாக 43 சொத்துகளை வாங்கியிருக்கிறார் அசோகன். அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? இதில் ஓபிஎஸ்சின் பங்காக ஏதும் இருக்கலாமோ என சந்தேகிக்கிறோம்” என சத்தமில்லாமல் கொளுத்திப் போடுகிறது எடப்பாடியார் டீம். இதைக்கேட்டு சூடாகிவிட்ட அசோகன், “ஒரு மனுஷனுக்கு நன்றி விசுவாசமா இருக்கது குத்தமாய்யா... அதுக்காக இப்படி எல்லாமா அவதூறு பரப்புவாங்க. அப்படியே நான் சொத்து வாங்கிருந்தாலும் அதுக்கும் ரெட்டைத் தலைமையே இருக்கட்டும்னு நான் சொல்றதுக்கும் என்னய்யா சம்பந்தம்?” என்று ஆவேசப்படுகிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in