மனைவிக்குப் பிரியமான வீட்டில் ஓபிஎஸ்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஜெயலலிதா இருந்தபோது, வாஸ்து பார்த்து பெரியகுளத்தில் வடக்கு அக்ரஹாரம் தெருவிலுள்ள தனது வீட்டிலிருந்து தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள பங்களாவுக்கு குடிபெயர்ந்தார் ஓபிஎஸ். இங்கு தான் அவரது மகன் ரவீந்திரநாத் எம்பியும் வசிக்கிறார். மனைவி இறப்பதற்கு கொஞ்ச காலம் முன்பே, மீண்டும் அவரது விருப்பப்படியே பழைய வீட்டுக்கே போய்விட்டார் ஓபிஎஸ். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஓபிஎஸ் மனைவி, “நம்ம (வடக்கு அக்ரஹாரம்) வீட்டுக்குப் போனாலே எனக்கு எல்லாம் சரியாகிரும்க” என்று சொன்னார். அந்த வீட்டின் மீது அவருக்கு அத்தனை பிடிப்பு. அதனால், மனைவி இறந்த பின்பும்கூட அங்கேயே தனியே வசிக்கிறார் ஓபிஎஸ். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றாலும், “ஒரு பெரியாம்பளைய இப்படித் தனியா விடலாமாப்பா?” என்று ரவீந்திரநாத்திடம் கட்சி நிர்வாகிகள் கேட்டார்களாம். அதற்கு, “அப்பா பிரைவசியில நாங்க தலையிட முடியாதுல்ல” என்று பதில் சொல்லிவிட்டாராம் ரவீந்திரநாத்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in