
நாளுக்கு நாள் தனது அணி பலமிழந்து வருவதால் சஞ்சலத்தில் இருக்கிறாராம் ஓபிஎஸ். ஆனாலும், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டவர்கள் அவருக்கு இன்னமும் நம்பிக்கையூட்டி வருகிறார்களாம். இதனிடையே, டி.டி.வி.தினகரனுடன் மனம்விட்டுப் பேசிய ஓபிஎஸ், “கட்சி நிலைமை இப்படியே போயிட்டு இருக்கிறது நல்லது இல்ல. பார்லிமென்ட் எலெக்ஷனுக்குள்ள எப்படியாச்சும் பார்ட்டி ஒண்ணாகணும். அதுக்கு நீங்க தான் ஏதாச்சும் பண்ணணும். பொதுச்செயலாளர் பதவி தான் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியம்னா, நான் இணைப் பொதுச்செயலாளராகக்கூட இருந்துட்டுப்போறேன். எனக்கு முக்கியம் கட்சி ஒற்றுமைதான்” என்று சொன்னாராம். எடப்பாடியும் ஓபிஎஸ் கருத்தில் இருக்கும் எதார்த்தத்தைப் புரிந்தே வைத்திருக் கிறாராம். ஆனால், ஓபிஎஸ்சுடன் அவர் ஒத்துப்போக நினைத்தாலும் அவரை இயக்கும் அந்த ஐவர் அணி அத்தனை எளிதாக அதற்கு சம்மதிக்கவிடாது என்ற தகவலையும் ஓபிஎஸ் காதில் சிலர் ஓதியிருக்கிறார்களாம்.