ஜெயிச்சும் சேர்மன் ஆகமுடியல!

ஜெயிச்சும் சேர்மன் ஆகமுடியல!

அண்ணன் வழியில் பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு இம்முறை அடிப்போட்டார் ஓபிஎஸ்சின் தம்பிகளில் ஒருவரான சண்முகசுந்தரம். ஆனால், தம்பி தேர்தலில் நிற்பதையே ஓபிஎஸ் விரும்பவில்லையாம். என்றாலும் கட்சி அறிவித்த கவுன்சிலர் வேட்பாளரையே தன் பெயரை முன்மொழிய வைத்து தேர்தலில் போட்டியிட்டார் சானா மூனா. ஆனால், செலவுக்கு பணம் கொடுத்ததைத் தவிர தம்பியின் வெற்றிக்காக ஓபிஎஸ் எதுவும் மெனக்கிடவில்லையாம். ஆனாலும் தனது சொந்த செல்வாக்கிலும் அண்ணன் பெயரைச் சொல்லியும் வெற்றிவாகை சூடிய சண்முகசுந்தரம், “அண்ணன் கொஞ்சம் மனது வைத்திருந்தால் வெயிட்டான வேட்பாளர்களை நிறுத்தி நகராட்சியையே கைப்பற்றியிருப்பேன். இப்பப் பாருங்க... ஜெயிச்சும் சேர்மன் ஆகமுடியல” என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in