வடக்கு வளம் தருமா ஓபிஎஸ்சுக்கு?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

வழக்கு, வாய்தாக்கள் ஒருபுறமிருக்க... ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே ஒருவர் மற்றவரின் ஏரியாவில் பலம்காட்ட முயன்று வருகிறார்கள். தென் மாவட்டங்களில் உதயகுமார் மாதிரியான விசுவாசிகளை வைத்து இதை மிகச் சரியாகவே செய்து வருகிறார் ஈபிஎஸ். இதேபோல் ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சுக்குச் சாதகமான வடமாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பிளான் போடுகிறாராம். இதன் ஒருபகுதியாக வடக்கில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த ஓபிஎஸ் டீம் வொர்க் அவுட் செய்கிறதாம். “ஜெயலலிதாகூட 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்திலிருந்து தான் தொடங்கினார். அதே ரூட்டில் காஞ்சிபுரம் அல்லது சென்னையில் பொதுக்கூட்டத்தை நடத்தி பலத்தைக்காட்டலாம்” என தங்கள் ஐயாவுக்கு ஆலோசனை சொல்லிவருகிறதாம் ஓபிஎஸ் டீம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in