ஐயாவைச் சுற்றும் ஐடி விங்!

ஐயாவைச் சுற்றும் ஐடி விங்!

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடங்களுக்கு அதிரடி விசிட்களை அடித்து அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின். “இது எல்லாமே செட்-அப்” என எதிர்தரப்பில் விமர்சனங்கள் பறந்தாலும் மக்கள் மத்தியில் முதல்வரின் நடவடிக்கைகள் பேசப்படும் விஷயமாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் தனது தேனி மாவட்டத்தில் கட்சிக்காரர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். அப்படிப் போகும்போது கட்சியின் அதிமுக ஐடி விங் ஆட்களும் கூடவே செல்கிறார்கள். போகிற இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக லைக்குகளை அள்ளலாம் என நினைத்தார்களோ என்னவோ, கடந்த வாரத்தில் ஓபிஎஸ்ஸை கட்சிக்காரர் ஒருவரின் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து வரவைத்தார்கள். அதை அப்படியே படம்பிடித்து அத்துடன், ‘கழக ஒருங்கிணைப்பாளர் என்ற கர்வம் இல்லை. முன்னாள் முதல்வர் என்ற ஆணவம் இல்லை. தொகுதிக்குள் தொண்டனாய் தொண்டு செய்ய இருசக்கர வாகனத்தில் களப்பணி ஆற்றிடும் ஐயா ஓபிஎஸ்’ என்ற வாசகங்களையும் சேர்த்து வலைதளத்தில் விட்டார்கள். தலைவனை சைக்கிள் ரேஞ்சுக்கு கொண்டுபோகாமல் இருந்தால் சரிதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in