ஒரு மாவட்டம்... ஒரே செயலாளர்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்KUMAR SS

கட்சியின் நிர்வாக வசதிக்காகவும், கழகத்துக்குள் கலகம் செய்வோரைக் கட்டிப்போடவும் மாவட்டங்களைப் பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமித்தார் ஸ்டாலின். கருணாநிதி காலத்திலேயே இந்த நடைமுறை இருந்தது என்றாலும் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்த பிறகு இது இன்னும் அதிகமானது. ஆனால், அதுதான் இப்போது கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரும் தலைவலியாய் இருக்கிறதாம். அதிகாரத் தோரணையுடன் ஆறேழு தொகுதிகளை ஆண்டு கொண்டிருந்த மாவட்டச் செயலாளர்கள் தற்போது இரண்டு மூன்று தொகுதிகளுக்குள் அடக்கப்பட்டு விட்டார்கள். ஆனாலும் வருவாய் மாவட்டத்துக்குள் எங்கே டெண்டர் நடந்தாலும் “ நாங்களும் இந்த மாவட்டம்” தான் என பக்கத்து (கட்சி) மாவட்டத்துக்கும் போய் மல்லுக்கு நிற்கிறார்களாம். எக்கச் சக்கமாய் மாவட்டச் செயலாளர்கள் இருப்பதால் அமைச்சர்களிடம் பரிந்துரைக் கடிதங்களும் பஞ்சமில்லாமல் குவிகிறதாம். இந்த சிக்கல்களை எல்லாம் சமாளிக்க ஏதுவாக ஒருசில பெரிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களை எல்லாம் பழையபடி ஒரே மாவட்டமாக்கி ஒரே செயலாளரை நியமிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம் ஸ்டாலின். ஒருவேளை, மாவட்டங்கள் மீண்டும் ஒன்றாக்கப்பட்டால் பலபேருக்கு பவர் போய்விடும் என்பதால் புதிதாக வந்த மாவட்டச் செயலாளர்களில் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in