ஓபிஎஸ்சிடம் இப்படியும் ஒரு திட்டமிருக்காம்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் ஈபிஎஸ் பக்கமே நிற்கிறார்கள். அவர்களை அப்படியே தங்கள் பக்கம் தள்ளிக்கொண்டு வருவது சிரமம் என்பதால் இன்னொரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறாராம் ஓபிஎஸ். ஈபிஎஸ் வகித்துவந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் வைத்திலிங்கத்தை அமர்த்தி அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், அடுத்ததாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களைத் தேடிப் பிடித்துக் கண்டுபிடித்து மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தி வருகிறார். இதன் அடுத்தகட்டமாக தமிழகம் முழுமைக்கும் பொதுக்குழு அந்தஸ்திலான நிர்வாகிகளை நாமும் நியமிப்போம் என ஓபிஎஸ்சுக்கு யோசனை சொல்லி இருக்கிறாராம் வைத்திலிங்கம். அப்படி புதிதாக பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்த பிறகு போட்டிப் பொதுக்குழுவை நடத்தி முடித்து தேர்தல் ஆணையத்தில், “நாங்கள் தான் உண்மையான அதிமுக” என பஞ்சாயத்துக் கூட்டவும் தயாராகி வருகிறதாம் ஓபிஎஸ் டீம். அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆன கதை தான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in