நேரடியாக நிதியமைச்சரை சந்திக்க முடியாதாம்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர்களை உரிய அனுமதி இருந்தால் யார் வேண்டுமானாலும் சந்தித்துவிட முடியும். ஆனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அத்தனை எளிதாகச் சந்திக்க முடியவில்லை என்கிறார்கள். நிர்மலாவைச் சந்திக்க அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டாலும் அப்பாயின்மென்ட் கிடைப்பதில்லையாம். அவர் யாரைச் சந்திக்க வேண்டும், யாரைச் சந்திக்கக்கூடாது என்பதை எல்லாம் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகளே தீர்மானிக்கிறார்களாம். இந்த நடைமுறையை வெளிப்படையாகவும் அறிவிக்கவில்லை என்பதால் நிர்மலாவைச் சந்திக்க வழிதெரியாமல் பலரும் எங்கெங்கோ முட்டி மோதுகிறார்கள். அதேசமயம், சுவிட்ச் இருக்கும் சூட்சுமம் தெரிந்துகொண்ட பாஜக தலைகள் மட்டும் நேரடியாக பிரதமர் அலுவலகத்தை அணுகி அனுமதிபெற்று அல்லுச் சில்லு இல்லாமல் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து காரியம் சாதித்து வருகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in