லட்சியம் செய்யாத லட்சுமணன்!

லட்சியம் செய்யாத லட்சுமணன்!
ஏ.எல்.எஸ்.லட்சுமணன்

சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரனிடம் தோற்ற பின்பு அரசியல் துறவறம் போல் ஒதுங்கியே இருக்கிறார் திருநெல்வேலி மாநகர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன். இவருக்கும் சேர்த்து மத்திய மாவட்டச் செயலாளரும், பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான அப்துல் வஹாப் அனைத்திலும் அடித்தாடுகிறார். நெல்லை மேயர், துணை மேயர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளிலும் தனது விசுவாசிகளையே அமரவைத்திருக்கிறார் அப்துல் வஹாப். இத்தனைக்கும், நெல்லை மாநகராட்சியின் பெரும்பகுதி லட்சுமணனின் ஆளுகைக்குள் தான் வருகிறது. ஆனாலும், இவர் ஏன் ஒதுங்கியே நிற்கிறார் என்று ஆதங்கப்படுகிறார்கள் லட்சுமணனின் ஆதரவாளர்கள்.

Related Stories

No stories found.