விசிக சார்பில் வழங்கப்படும் ‘காமராசர் கதிர் விருது’ இந்த ஆண்டு தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாகப் பேசிவருகிறார், மூத்த காங்கிரஸ்காரர் நெல்லை கண்ணன். “இத்தனை ஆண்டும் என்னைப் பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் எல்லாம் என்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவமதித்தனர். என்னை மனிதனாக மதித்து, எனக்கு மரியாதை செய்யும் தம்பி திருமா மடியில் மரணம் நிகழ்ந்தாலும் மகிழ்ச்சி அடைவேன். ஒருமுறை ஜெயலலிதா எனக்கு பாரதி விருது அறிவித்தபோது, அதை சசிகலா அவரது சாதிக்கார பேராசிரியருக்கு கொடுக்கச் செய்துவிட்டார். இனி, இறுதி மூச்சுவரை திருமாவே என் பாதுகாவலன்” என நெக்குருகுகிறார் நெல்லை கண்ணன்.