ஹாட் லீக்ஸ் - திருச்சி மேயரை வசமாக்குவது யார்?

ஹாட் லீக்ஸ் - 

திருச்சி மேயரை வசமாக்குவது யார்?
கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி

திருச்சி திமுக மேயர் வேட்பாளர் அன்பழகன்தான் என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார், அமைச்சர் கே.என்.நேரு. ஆனாலும், அந்த இடத்தில் தனது விசுவாசி ஒருவரை உட்காரவைக்க இன்னமும் மெனக்கிடுகிறாராம், திருச்சியின் இன்னொரு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் 22 வார்டுகள் நேருவின் கட்டுப்பாட்டிலும் 28 வார்டுகள் மகேஷின் கட்டுப்பாட்டிலும் வருகின்றன. தனது பகுதிக்குள் அதிகமான வார்டுகளை வென்றெடுத்தால், தான் நினைப்பவரை மேயராக இல்லாவிட்டாலும் துணை மேயராகவாவது உட்கார வைத்துவிடலாம் என நினைக்கிறார் மகேஷ். அதற்கேற்ப, தனது வேட்பாளர் சாய்ஸில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெருவாரியாக வாய்ப்பளித்திருந்தாராம். ஆனால், முதன்மைச் செயலாளர் கோதாவில் அந்த பட்டியலுக்குள் ஊடுருவிய நேரு, சாதி வித்தியாசம் பார்க்காமல் உண்மையான கட்சி விசுவாசிகள் சிலரை உள்ளே திணித்துவிட்டாராம். இதனால், மகேஷ் ஏரியாவிலும் இப்போது நேரு அபிமானிகள் சிலர் களத்தில் நிற்கிறார்கள். இதனால், திருச்சி மாநகராட்சியை கைப்பற்றுவது திமுகவா, அதிமுகவா என்பதைவிட நேரு கோஷ்டியா, மகேஷ் கோஷ்டியா என்ற பேச்சே இப்போது மேலோங்கி நிற்கிறது.

Related Stories

No stories found.