திண்ணை காலி... தினுசுக்கொருவர் போட்டி!

ஈபிஎஸ் உடன் சுகுமாறன்
ஈபிஎஸ் உடன் சுகுமாறன்

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதால் அவரை கட்சியிலிருந்தே கட்டம் கட்டிவிட்டார் ஈபிஎஸ். இதையடுத்து அசோகனின் இடத்துக்கு ஆளாளுக்கு இப்போது முட்டி மோதுகிறார்கள். முன்னாள் அமைச்சர் பச்சைமாலும் முன்னாள் எம்எல்ஏ-வான நாஞ்சில் முருகேசனும் அதில் முன்னணியில் நிற்கிறார்கள். ஆனாலும், முருகேசன் போக்சோ வழக்கில் சிக்கியவர் என்பதால் அதைச் சொல்லி அவரைப் பின்னுக்குத் தள்ளுகிறார்களாம். அமமுகவிலிருந்து வந்த பச்சைமாலுக்கு அதற்கு பிரதிபலனாக அப்போது அமைப்புச் செயலாளர் பதவி அள்ளிக்கொடுக்கப்பட்டது. எனவே, அதைக் காரணம் காட்டி அவருக்கும் சிலர் முட்டுக்கட்டை வைக்கிறார்களாம். இந்தப் போட்டிக்கு நடுவில் தனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துவிடாதா என அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாவட்டச் செயலாளர் நாஞ்சில் சுகுமாறன் ஒரு பக்கம் நூல் பிடிக்கிறாராம். “இளைஞர்களைத் தான் எடப்பாடியார் விரும்புகிறார். அப்படிப் பார்த்தா மத்த ரெண்டு பேரும் அடிபட்டுப் போவாங்க. உங்களுக்குத்தானே சான்ஸ் இருக்கு; விட்டுறாதீங்க” என சுகுமாறின் ஆதரவாளர்கள் அவரை உசுப்பேற்றுகிறார்களாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in