
“நாஞ்சில் சம்பத்துக்கு நரம்பு மண்டலத்தில் பிரச்சினை இருக்கிறது அதனால் தான் அவர் நா தவறி பேசுகிறார்” என போலீஸில் புகார் கொடுக்கும்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான இன்பதுரைக்கு சட்ட ஆலோசனை கொடுத்தது தளவாய் சுந்தரமாம். 2015-ல் நாஞ்சில் சம்பத் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த சமயத்தில் திடீரென ஒரு நாள், நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு மணக்காவிளையில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்தார் சம்பத். அப்போது குமரி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த தளவாய்சுந்தரம்தான் அவரை முத்துரத்தினம் நியூரோ சென்டரில் சிகிச்சைக்கு சேர்த்தார். அதன் பிறகு அவரை சென்னைக்கு வரவழைத்து உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. அந்த நேரத்தில் சம்பத்தின் உடல் நிலை குறித்த முழு விவரமும் தனக்குத் தெரியும் என்பதாலேயே இப்படியொரு புகாரை கொடுக்க வைத்து குறிப்பால் உணர்த்தினாராம் தளவாய்.