
தனது மகள் ஸ்ரீலிஜாவை எப்படியும் நாகர்கோவில் மேயராக்குவது என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார், அதிமுக முன்னாள் எம்எல் ஏவான நாஞ்சில் முருகேசன். ஆனால், அதிமுக கவுன்சிலர்களின் தயவை மட்டும் நம்பி இருந்தால் மகளை மேயராக்க முடியாது என்பதால், மாற்றுக் கட்சியினருக்கும் இப்போதே வலைவீசுகிறார். உறுதியாக இவர் ஜெயிப்பார் என நம்பும் வேட்பாளர்களுக்கு, தேர்தல் செலவுக்காக தலா 5 லட்ச ரூபாயை ரகசிய முன்பணமாக கொடுத்திருக்கிறாராம் நாஞ்சில். முன்பணம் பெற்றவர்கள் மேயர் தேர்தலில் தனது மகளுக்கு வாக்களித்தால், 5 சென்ட் பட்டா நிலம் வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நாஞ்சில் முருகேசன்.