சொல்லியிருந்தா கட்டியிருப்பேனே..!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்


மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிபாக்கி வைத்திருப்பவர்களின் பெயரை அண்மையில் பகிரங்கமாகவே வெளியிட்டது மாநகராட்சிக்கு நிர்வாகம். இதில், தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் பெயரும் இருக்கிறது. 2,89,208 ரூபாய் வரிபாக்கி வைத்திருக்கிறாராம் நயினார். ஏராளமான நிலபுலன்கள், சொத்துகளுக்குச் சொந்தக்காரரான நயினாரை தொகுதிவாசிகள் பண்ணையார் என்றே அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட தன்னை இப்படி அசிங்கப்படுத்திவிட்டார்களே என ஆதங்கப்பட்ட அவர், “கோயில் விசேஷங்கள் தொடங்கி, கஷ்டம் என்று வருபவர்கள் வரைக்கும் என்னால் முடிந்தவரைக்கும் உதவி செய்பவன் நான். வரி பாக்கி இருப்பதை ஒரு போன்போட்டுச் சொல்லி இருந்தால் உடனே பணம் வந்திருக்கும். அப்படி இல்லாமல், இப்படிச் செய்துவிட்டார்களே” என்று புலம்பி விட்டாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in