இதற்குத்தான் மேயரானாரா மகேஷ்?

இதற்குத்தான் மேயரானாரா மகேஷ்?
மேயர் மகேஷ்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆன கையோடு, குமரி மாவட்ட திமுக செயலாளராக இருந்த சுரேஷ்ராஜனின் பதவிக்கும் வேட்டுவைத்து அந்தப் பொறுப்பிலும் தானே அமர்ந்தார் மகேஷ். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகச் சொல்லி சுரேஷ்ராஜனின் பதவியைப் பறித்த மகேஷ், இப்போது தானே பாஜக மீது பாசமழை பொழிவதாக பழிபோடுகிறது எதிர்கோஷ்டி. அதற்கேற்ற வகையில் தான் அங்கே நடக்கும் சம்பவங்களும் இருக்கின்றன. திமுக மேயர் அமர்ந்திருக்கும் நாகர்கோவில் மாநகராட்சியின் நகரமைப்புக்குழுத் தலைவராக பாஜகவை சேர்ந்த ரமேஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல தெற்கு மண்டலத் தலைவர் பதவிக்கும் பாஜகவின் முத்துராமன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையெல்லாம் சுட்டிக்காட்டும் சுரேஷ்ராஜன் கோஷ்டியினர், “எங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பாஜகவுக்கு பொறுப்புகளை வாரி வழங்கத்தான் மகேஷ் மேயராக்கப்பட்டாரா?” என புலம்புகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in