மீண்டும் மீனா தேவ்; மிரட்டும் பாஜக!

மீனா தேவ்
மீனா தேவ்

11 கவுன்சிலர்களை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு மாநகராட்சி மேயர் தேர்தலில் 24 வாக்குகளைப் பெற்ற ஆளும் திமுகவையே அரள வைத்தது நாகர்கோவில் பாஜக. ஆனாலும் 4 வாக்குகள் வித்தியாசத்தில் மேயரைத் தக்கவைத்தது திமுக. இருந்தாலும் இன்னமும் நம்பிக்கை இழக்காத பாஜக, “6 மாதம் பொறுத்திருங்கள்... நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிப்போம். மீண்டும் மீனா தேவை மேயராக்குவோம்” என தங்களுக்கு வாக்களித்த கவுன்சிலர்களுக்கு தைரியம் சொல்லி வருகிறதாம். இது தொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர், மதில் மேல் பூனையாக உட்கார்ந்திருக்கும் கவுன்சிலர்களிடம் ‘ஆசை ஆசை’யாய் பேசிவருகிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in