ஆர்.எஸ்.எஸ் வலையில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ?

காதர்
காதர்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் கோலோச்சியவர் அப்துல்லா குட்டி. எம்பி, எம்எல்ஏ என பதவிகளையும் அனுபவித்த இவர் இப்போது பாஜகவில் இருக்கிறார். இவருக்கு கட்சியில் தேசியப் பொறுப்பும், ஹஜ் யாத்திரை சேர்மன் பதவியையும் வாரிவழங்கியது பாஜக. இவரைத் தொடர்ந்து அடுத்ததாக முஸ்லிம் லீக் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ-வான கே.என்.ஏ.காதரை நோக்கி கவனத்தைத் திருப்பி இருக்கிறது பாஜக. அண்மையில் காதரை ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு அழைப்பாளராக பேச அழைத்திருக்கிறார்கள். காதரும் மறுப்புச் சொல்லாமல் கலந்து கொண்டு சர்வமத நல்லிணக்கத்தை மையமாக வைத்துப் பேசிவிட்டு வந்தார். காதரை தங்கள் பக்கம் இழுக்க பாஜக இப்படியெல்லாம் காய் நகர்த்த, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன் என காதர் பாயிடம் விளக்கம் கேட்டிருக்கிறதாம் அவர் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in