கம்பெனி ஒன்று... அடிக்கல் மூன்று!

அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர்...
அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர்...Home

ஏப்ரல் 5-ம் தேதி, விழுப்புரத்துக்கு சமத்துவபுரம் திறக்க வந்த தமிழக முதல்வர், அப்படியே மயிலம் தொகுதியில் உள்ள சிப்காட்டில் ஷூ கம்பெனி ஒன்றுக்கும் அடிக்கல் நாட்டினார். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே கம்பெனிக்கு ஏப்ரல் 1-ம் தேதி, தொகுதியின் பாமக எம்எல்ஏ-வான சிவகுமார் அடிக்கல் நாட்டினார். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் மாவட்ட அமைச்சரான மஸ்தான், மாவட்ட ஆட்சியர், எஸ்பி சகிதம் அங்கு சென்று தன் பங்கிற்கும் ஒரு அடிக்கல்லை நாட்டினார். இப்படி இரண்டு முறை இரண்டு நபர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஷூ கம்பெனிக்குத் தான், மீண்டும் விழா நடத்தி மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலினை வைத்து அடிக்கல் நாட்ட வைத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in