உங்காம திங்காம 4 லட்சம் போச்சே..!

காசோலை வழங்கியபோது
காசோலை வழங்கியபோது

காவலர் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தவறுதலாக துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பலியான, சிறுவன் புகழேந்தியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தார் முதல்வர். இதற்கான காசோலையை வழங்கப்போன அமைச்சர்கள் ரகுபதியும் மெய்யநாதனும் தவறுதலாக இன்னொருவருக்கு வழங்கவேண்டிய 4 லட்ச ரூபாய்க்கான வரைவு காசோலையை வழங்கிவிட்டார்களாம். இந்தக் குழப்பத்துக்குக் காரணமான அதிகாரிகள் லேட்டாக சுதாரித்துக் கொண்டு, உண்மையிலேயே அந்தக் குடும்பத்துக்குத் தரவேண்டிய காசோலையையும் எடுத்துக் கொடுத்தார்கள். அதையும் அமைச்சர்களே அந்தக் குடும்பத்துக்கு வழங்கினார்கள். அமைச்சர்கள் போனபிறகு முந்தைய காசோலையை திருப்பித் தரும்படி அதிகாரிகள் கேட்டதற்கு சிறுவனின் குடும்பத்தினர் தர மறுத்துவிட்டார்களாம். இந்த விஷயம் அமைச்சர் ரகுபதியின் காதுக்குப் போனதும், இதனால் தேவையற்ற சர்ச்சைகள் வளரவேண்டாம் என நினைத்தவர், தனது சொந்தப் பணம் 4 லட்சத்தை எடுத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். அதைக் கொண்டு போய்க் கொடுத்து சிறுவனின் குடும்பத்தாரிடம் இருந்த காசோலையை மீட்டார்களாம் அதிகாரிகள். “இந்த அதிகாரிங்க அலட்சியத்தால எங்க அமைச்சருக்கு உங்காம திங்காம 4 லட்ச ரூபாய் போச்சு” என்று புலம்புகிறதாம் ரகுபதி வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in