திமுக மாவட்ட செயலாளர்களுக்கு செக்வைக்கும் செந்தில் பாலாஜி!

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு செக்வைக்கும் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் 5 பேரில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக்கை தவிர மற்ற நான்கு பேர் கோவை வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலினை தனியே சந்தித்து தங்கள் மனக்குமுறலைக் கொட்டுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். காரணம், இவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு அந்த இடங்களில் தனது ஆதரவாளர்களை நியமிக்க திட்டமிடுகிறாராம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி.

இந்த நான்கு பேரும் ஏதோ ஒரு வகையில் அதிமுகவினரிடம் இணக்கமாகச் செல்கிறார்கள் என்று தலைமையிடம் சொல்லித்தான் தன்னவர்களை மாவட்டச் செயலாளர்களாக அமர்த்த அனுமதி வாங்கிவிட்டாராம் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லவே முதல்வரைச் சந்திக்கத் துடிக்கிறார்களாம் அந்த நால்வரும். கரூர் மாவட்ட திமுகவைப் போலவே தனக்கு நிகராக யாரும் இல்லை என்ற நிலையைக் கோவையிலும் உருவாக்க நினைக்கிறார் செந்தில் பாலாஜி என்பதே இந்த நால்வரின் ஒட்டுமொத்த ஆதங்கமாம். இவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க, இவர்களில் சிலர் எப்படியெல்லாம் கடந்த ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி தரப்பின் அரவணைப்பில் கட்டுண்டு கிடந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் புள்ளிவிவரமாக தலைமைக்குத் திரட்டிக் கொடுத்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in