மைண்ட் வாய்ஸில் பேசிய மந்திரி!

மைண்ட் வாய்ஸில் பேசிய மந்திரி!
ரகுபதி

வெளியில் சொல்லக்கூடாது என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும் சிலபேர், மைண்ட் வாய்ஸ் கணக்காய் மனதில் உள்ளதைப் பட்டெனச் சொல்லிவிடுவார்கள். அப்படித்தான் சட்ட அமைச்சர் ரகுபதியும், அரசு விழாவுக்கு வந்த இடத்தில் சொல்லியே சொல்லிவிட்டார். ரகுபதி இயல்பாகவே எம்ஜிஆரின் தீவிர விசுவாசி. அதிமுகவில் இருந்த காலத்தில்கூட ஜெயலலிதாவைவிட எம்ஜிஆரை அதிகம் போற்றியவர். கடந்த 25-ம் தேதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான சிகிச்சைப் பிரிவை தொடங்கிவைக்க வந்திருந்தார் ரகுபதி. வந்த இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறைக் கைதிகளின் நலனிலும் அக்கறை செலுத்தும் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர்” என்று கடகடவெனச் சொன்னார். பிறகு, யாரும் இதைக் கவனிக்கும் முன்பாக அவரே சுதாரித்துக்கொண்டு, “எங்கள் இயக்கத் தலைவர் தளபதி” என்று சொல்லிச் சமாளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in